uyirttezhu

yq.app.link/Go5xIZfYNR

Women poet ✍️ #uyirttezhu_quotes #uyirttezhu_poems #uyirttezhu#kadhalnathi#nathinile

Grid View
List View
Reposts
  • uyirttezhu 4w

    மழை போலத் தான் நீ,
    உன்னை காணும் பொழுது எல்லாம்
    குழந்தையாகவே மாறி மகிழ்கின்றேன்...
    ©uyirttezhu

  • uyirttezhu 4w

    உறங்கச் செல்லும் நிலவை
    உறங்கா விழிகள் இரண்டு
    உரையாடலுக்கு அழைத்து நிலவின்
    உறக்கத்தையும் சேர்த்துப் பறிக்கின்றது...
    ©uyirttezhu

  • uyirttezhu 4w

    அப்பாவின் அன்பு
    அவரைப் போலவே
    வார்த்தைகளால் வெளிப்படுத்த
    முடியாத ஒன்று...
    ©uyirttezhu

  • uyirttezhu 4w

    வழியில் வலிகளின்
    குறுக்கீடுதான் வாழ்க்கையைச்
    செதுக்குகின்ற உளியாயிருக்கும்...
    ©uyirttezhu

  • uyirttezhu 4w

    வருடங்கள் கடந்தாலும்
    வலிகள் நீங்கவில்லை...
    ©uyirttezhu

  • uyirttezhu 4w

    நிலவின் ஒளிச்சாரலில்
    நனைந்த நினைவுகள்...
    ©uyirttezhu

  • uyirttezhu 4w

    ... சமுதாய சாக்கடை...
    பசுமையான இயற்கை வளங்களை
    அழித்து விட்டு
    பசுமையை காப்போம் என்று
    கூச்சலிடும் சமூகமே
    உயிருக்கு ஆதாரமான உணவின் அருமையை
    உணராமல் சிலர் வீண் செய்ய
    உணவுக்காக ஏங்கி பசியால் மடியும்
    பலரின் அவலநிலை எப்போது மாறுமோ?
    மழலை மனம் மாறா பச்சிளம் குழந்தையை
    மனிதமே இல்லாமல் காமப்பசிக்கு
    இரையாக்குவது நியாயமா?
    மதித்து வணங்கும் பெண்மையை
    மிதித்து அடக்கநினைப்பது நன்மையா?
    ஒருவன் நிலை உயர்ந்தாலும்
    பொறாமைத் தீயில் வீசும்
    அவன் நிலை சிறிது
    தாழ்ந்தாலும் இவ்வுலகமே ஏசும்.
    முன் விட்டு பின் தாக்கும் எதிரியுமிருக்க
    உடனிருந்தே உன்னைத் தாக்கும்
    துரோகிகளும் உண்டே?
    சேற்றில் கால் வைத்து
    சோற்றை நமக்களிக்கும் உழவர்களையும்
    சோற்றுக்கு பதிலாக சேற்றை
    உண்ண வைக்கும் சமூகமிதுவே.
    தேங்கி நிற்கும் கழிவு நீர்
    துர்நாற்றம் வீசும் சாக்கடையாய் மாறும்
    தீய குணங்களை உடைய மனிதர்கள்
    வாழும் சமூகம் சமுதாய சாக்கடையாய்
    மாறி மரணத்தை நோக்கியே அழைத்துச்செல்லும்..
    - உயிர்த்தெழு நதியா

    #yqkanmani #tamil #uyirttezhu_quotes #yqtamil #uyirttezhu_poems #society #reality

    Read More

    சமுதாய சாக்கடை
    ©uyirttezhu

  • uyirttezhu 4w

    கண்கள் காணும்
    காட்சிகளெல்லாம் காணும்
    கண்களுக்கே சொந்தமில்லை...
    ©uyirttezhu

  • uyirttezhu 18w

    ... நீர்...
    பஞ்சமில்லா வாழ்வைத் தரும்
    பஞ்சபூதங்களில் நீரும் ஒன்று,
    பரந்து விரிந்து கிடந்தாலும்
    பலகோடி மக்கள் பருகுவதற்கு
    தூய நீரில்லையே இன்று.
    உருவமற்ற திரவத்திற்கு நிறமும் இல்லை,
    கொட்டும் மழைநீரை சேகரிக்க ஆளுமில்லை.
    நீரில்லா கோளும் நிலவாக மாறும்,
    நீரிருந்தால் நிலவும் பூமியாகத் தோன்றும்.
    ஓடும் பாதைகளைத் தடுத்தால்
    புதிய பாதைகளை உருவாக்கும்,
    கல்லெறியும் மக்களையும் கண்டு
    கொள்ளாமல் செல்லும் நீரினைப்
    போன்றே நாமும் வாழவேண்டும்,
    போகும் இடமெல்லாம் நின்பெயரை
    ஊர் சொல்லல் வேண்டும்...
    - உயிர்த்தெழு நதியா

    #tamil #uyirttezhu_quotes #uyirttezhu_poems #water #mirakee_tamil #mirakee

    Read More

    Water

  • uyirttezhu 18w

    ... குடும்பம்...
    குடும்பமெனும் ஆலமரத்தினிலே
    விழுதுகளாய் உறவுகள்.
    பாதைகளற்ற பயணத்தினிலே
    வழிகாட்டியாய் முன்னோர்கள்.
    கவலையான முகத்தினை கண்டு
    கட்டியணைக்க அன்னையும் உண்டு.
    கடுமையான குணத்திற்கு பின்பு
    மறைந்திருக்கிறது தந்தையின் அன்பு.
    உடன்பிறப்புகள் உடன் இருந்தால்
    உலகப்போரே நிகழ்வது உண்டு.
    கூடி வாழ்ந்த காலத்தினிலே
    கோடி இன்பம் கண்டவர்களுமுண்டு.
    நாகரீகத்தை நாடிச் சென்றதனாலே
    நிம்மதி இழந்து தவிக்குது.
    இன்பங்களை அள்ளி அள்ளி
    கொடுப்பதனாலே குடும்பமென்றானது...
    - உயிர்த்தெழு நதியா

    #uyirttezhu_quotes #uyirttezhu_poems #family #mirakee_tamil #mirakee

    Read More

    Family