sakthi_veeraa

தீரா காதல் வீரா

Grid View
List View
  • sakthi_veeraa 1w

    பிறை
    பிறந்து
    திரை
    நிறைந்த
    மேகமானேன்...!
    உன்
    இருவிழி
    சூடிய
    என்னைக் கண்டு..!!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 2w

    Onroad.

    Read More

    நெடுஞ்சாலை
    நீயானால்...!
    நின்னை
    நேசிக்க..!!
    மாசு நீக்கி
    தூசு தாங்குவேன்...!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 2w

    மாதவிக்
    காலாழி
    மணியாவும்..!
    உன்
    விழி உழல்
    நீராகுமே...!!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 5w

    மடலுடை மலரென
    மனம் கொண்டாய்..!
    மதியுடை வானென
    முகம் கொண்டாய்..!!
    பொதியிடை பூவே
    பதியென பதியேன்..!!!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 6w

    என்
    எழுவாய்
    எழுந்து..!
    தோன்றாப்
    பயனிலை
    என்றே
    முடிகிறாள்..!!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 7w

    யாவையும்
    எனதென்றாகும்..!
    ஏதும்
    எனதில்லை
    என்றபின்...!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 8w

    மொழி மறதி
    எனக்கு முதல் பிரதி..!
    உன்
    விழி மொழியே
    என் முதல் மொழியாய்..!!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 8w

    உன்னோடு
    உடையானேன்
    ஊனோடு
    பிரிந்தரியேன்..!
    ஏனோ
    சிறகே என்னை
    இறகெனப் பிரித்தாய்..!!
    உறவே
    உன் வண்ணம் நான்
    என் வானம் நீ
    உனக்கோ
    ஆயிரம் இறகு
    எனக்கோ
    ஓர் சிறகு
    இறகான உன்னோடு
    சிறகான சிறையாவதே
    என் தேடல்.
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 13w

    காலநிலை
    மாற்றமென்றே
    என்
    தேடல் நிலை
    தொடருதடி...!
    உறை உருகு
    நிலை நானே
    உயிர் மருவி
    உனதானேன்...!!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 14w

    வார்ப்புருவாய்
    வழிந்தோடும்
    விழிகளும்..!
    வனமுலை
    வாழ் நெஞ்சமும்
    வஞ்சனை செய்யுதடி...!!
    வாடா
    வள்ளியே
    உன்னை
    தேடா நானும் உண்டோ..!!!
    ©sakthi_veeraa