Grid View
List View
  • preetha_jagannathan 26w

    என்னவள்

    அனைவரின் முகத்திலும்
    ஆர்வத்தை கண்டேன்
    அவள் யாராக இருக்கக்கூடும்
    என்ற வினா என் காதில்
    கேட்கும் படி முணுமுணுத்தனர்
    அவர்களை கடந்து செல்ல
    முயன்றேன் கூட்டத்தில்
    ஒரு குரல் யார் அவள்
    என்று என்னிடம் கேட்டது
    சற்றே திரும்பி பார்த்தேன்

    அவளே என்னிடம் யார் அது
    என்று கேட்க என்ன சொல்வது
    என்று தெரியாமல் திகைத்து
    நின்றப்பொழுது தோன்றிய வரிகள்:

    அழகில் அதிரூப சுந்தரியோ ?
    - என்றாள்
    எண்ணத்தில் அவள் அதிரூப சுந்தரி
    என்றேன்

    நிறத்தில் வெள்ளையோ ?
    - என்றாள்
    நிலவில் தென்படும்
    கரும்புள்ளிகள் போல்
    அவளது முகத்திலும் உண்டு
    அவளின் குணத்திற்கு தினமும்
    திருஷ்டி கழிக்க முடியாது
    என்றே கரும்புள்ளிகள்
    அவள் முகத்தில் வைத்து விட்டார்
    கடவுள் என்றேன்

    நிலவில் களங்கம் இருந்தும்
    நாம் அதன் அழகை ஆராதிப்பதுப்போல்
    இவளின் அழகை ஆராதிப்பேன் என்றேன்

    மென்மையான குரல் உடையவளோ ?
    என்றாள்
    இல்லை தைரியமாக குரல் கொடுப்பாள் என்றேன்

    அவள் அவளாக
    இருப்பதாலே என்னவள்
    எனக்கு அதீருப
    சுந்தரியாக தெரிகிறாள்

    அவள் அவளாக இருப்பதாலே
    அவள் என்னவள் ஆனாள்
    என்றேன் அவளைப் பார்த்து
    கண்களில் கண்ணீருடன்
    ஓடி வந்து என்னை
    கட்டி அணைத்தாள்
    அவளைப் பார்த்து
    நீ தான் என்னவள் என்றேன் ❤

    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 28w

    புகைப்படவியல்

    என் எண்ணங்களின்
    பிரதிபலிப்பாக அவள்
    இருக்க வேண்டும்
    என்பதால் அவளை
    தேர்ந்து எடுத்தேன்
    என்றான் கேமிராவை
    பார்த்து..
    - காட்சிமொழி காதலன்

    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 30w

    Self Love❤

    Aren't you little obsessed with yourself? They asked her

    She smiled at them and said -

    Nope, it's better to love yourself with an extra 100% . Rather than expecting someone to love you the way how you deserved.




    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 30w

    அவரின் எழுதுகோலில்
    எழுத பழகினான்
    சட்டையில் அவரின்
    வாசனையை தேடினான்
    தந்தையின் அரவணைப்பு
    கிடைக்காதா என்று...


    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 30w

    அவளோ ஆறுதலாய்
    பேச யாருமே இல்லையே
    என்று சாய்ந்தாள்
    அப்பிஞ்சு கைகள்
    கண்ணீரை துடைத்தது
    தன் சிசுவே தனக்கு
    தாய் ஆனதை
    அவள் உணர்ந்தாள்


    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 30w

    அன்றே தெரிந்து இருந்தால்
    புவியின் நுரையீரலுக்கு
    தீங்கு விளைவித்திருக்க
    மாட்டேன் என்று
    யோசிக்கும் நிலையில்
    இன்று நாம்....



    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 30w

    சாவியை தொலைத்த
    பூட்டாய் தவித்தேன்
    மீண்டும் வந்தாய்
    தொலைந்த காதலை
    மீட்டு எடுக்க...


    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 30w

    உன்னை படிக்கும்
    முறையை மாற்றினேன்
    மாற்றிய பிறகுதான்
    உணர்ந்தேன் நான்
    உன் வாசனையின்
    மீது அதீத காதல்
    கொண்டிருந்தேன் என்று..


    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 31w

    ‍♀️

    She thought -
    Her wings were meant
    To conquer the world,
    But She didn't expect that
    The Society will decide
    The speed limit and distance
    Of those wings.


    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 31w



    அன்று நீ அழைத்தவுடன்
    உன் அழைப்பை எடுத்திருந்தால்
    இன்று நீ திரும்பி வரமாட்டாயா
    என்று ஏங்கி இருக்கமாட்டேன்.


    ©preetha_jagannathan