பொங்கும் பொங்கல
மரத்தின் உச்சிக் கிளையில் நின்று
உலகை ரசிக்காமல்
பெய்து வரும் மழைத்துளிகளில் ஆனந்தம் கொள்ளும்
அழகிய காகம்
அந்த அழகை ரசிப்பதே யோகம்
நனைந்து இருக்கும் மலர்கள்
மழை நீரை குடித்து மகிழ்ந்து திகட்டி நிற்கும் செடிகள்
சாரல் தன் மேல் படாமல் இருக்க ஜன்னல் ஓரத்தில் ஒளிந்திருக்கும் அணில் பிள்ளை
ஓராயிரம் பறவைகளை அடைக்கலம் கொடுத்து தலை நிமிர்ந்து நிற்கும் மரங்கள்
மேகத்தின் வண்ணம் மாற மாற
இயற்கையின் எழில் கூட கூட
பொங்கும் பொங்கலன்று எனது மனம்
©rajiny