• preetha_jagannathan 43w

    என்னவள்

    அனைவரின் முகத்திலும்
    ஆர்வத்தை கண்டேன்
    அவள் யாராக இருக்கக்கூடும்
    என்ற வினா என் காதில்
    கேட்கும் படி முணுமுணுத்தனர்
    அவர்களை கடந்து செல்ல
    முயன்றேன் கூட்டத்தில்
    ஒரு குரல் யார் அவள்
    என்று என்னிடம் கேட்டது
    சற்றே திரும்பி பார்த்தேன்

    அவளே என்னிடம் யார் அது
    என்று கேட்க என்ன சொல்வது
    என்று தெரியாமல் திகைத்து
    நின்றப்பொழுது தோன்றிய வரிகள்:

    அழகில் அதிரூப சுந்தரியோ ?
    - என்றாள்
    எண்ணத்தில் அவள் அதிரூப சுந்தரி
    என்றேன்

    நிறத்தில் வெள்ளையோ ?
    - என்றாள்
    நிலவில் தென்படும்
    கரும்புள்ளிகள் போல்
    அவளது முகத்திலும் உண்டு
    அவளின் குணத்திற்கு தினமும்
    திருஷ்டி கழிக்க முடியாது
    என்றே கரும்புள்ளிகள்
    அவள் முகத்தில் வைத்து விட்டார்
    கடவுள் என்றேன்

    நிலவில் களங்கம் இருந்தும்
    நாம் அதன் அழகை ஆராதிப்பதுப்போல்
    இவளின் அழகை ஆராதிப்பேன் என்றேன்

    மென்மையான குரல் உடையவளோ ?
    என்றாள்
    இல்லை தைரியமாக குரல் கொடுப்பாள் என்றேன்

    அவள் அவளாக
    இருப்பதாலே என்னவள்
    எனக்கு அதீருப
    சுந்தரியாக தெரிகிறாள்

    அவள் அவளாக இருப்பதாலே
    அவள் என்னவள் ஆனாள்
    என்றேன் அவளைப் பார்த்து
    கண்களில் கண்ணீருடன்
    ஓடி வந்து என்னை
    கட்டி அணைத்தாள்
    அவளைப் பார்த்து
    நீ தான் என்னவள் என்றேன் ❤

    ©preetha_jagannathan