Grid View
List View
Reposts
  • kowsuvinash 12w

    நீலநிற வானவில்லாய் போர்த்திய உடை ...நிறங்களை மறுப்பின் குணத்தை மறைக்கா முகம்...காந்தப்பார்வையை கைது செய்யாவண்ணம் மதில் சுவராய் நிற்கும் உன் கண்ணாடி...போரைத் துவங்க தயாராக நிற்பது போன்ற புருவங்கள்...நான் மட்டும் தீண்ட, சிவப்பு கம்பளமாய் வரவேற்கும் உன் உதடுகள்...அணு அணுவாய் உன்னை ரசிக்கும் நான் உன் ஆருயிரின் அணுவாய் மாறி உன் நினைவின் அங்கத்தில் ஆட்கொள்வது எப்போது?
    ©kowsuvinash

  • kowsuvinash 18w

    நேரத்தின் பொறாமையால், பிரிவில் நாம்..நாட்கள் கடப்பினும் என்னை உன்னிடம் தொலைத்து,எல்லை இல்லா அன்பில் திளைக்கிறேன்.. புன்முறுவலின் வலைக்குள் சிக்கிய நான்,உன் கருவிழியை நோக்கி உன் விரல் பிடித்து தோளில் சாய்ந்து நிலவை ரசிப்பது எப்போது?...
    ©kowsuvinash

  • kowsuvinash 25w

    Happy Men's day....

    Read More

    ஆண்....

    குடும்பத்தின் ஆணி வேர்...
    ஓய்வெடுக்கா கால்கள்...
    மழலைகள் மகிழ்வடைய மனம் நெகிழ்ந்து உழைக்கும் கரங்கள்...
    கஷ்டங்களை தன்னுள் வைத்து இஷ்டங்களை மட்டுமே வெளிப்படுத்தும் உயிராய் பிறந்து,தன் மழலைக்கு நடிகனாய்,தன் தாய்க்கு தகப்பனாய்,தோழிக்கு தோழனாய்,உற்றவளுக்கு ஊன்று கோலாய் ஊன்றிய உற்றவனாய்,தலை நரைத்தும் தடுமாறா, தன் பேர்வழி ஜனனங்களுக்கு அறிவூட்டும் ஆசானாய் விளங்கும் நீர் வாழிய வாழியவே....
    ©kowsuvinash

  • kowsuvinash 26w

    காணக்காதல்

    காணுகின்ற கண்ணின் கள்ளத்தனத்தைக் கண்டு காதலிப்பதை களைந்து, காணக் கண்ணில் களங்கி கள்வனின் கள்நெஞ்சை கயவாடி காதலில் கதைத்திருப்போம்...
    ©kowsuvinash

  • kowsuvinash 30w

    நூறு புகைப்படம் அனுப்பினாலும் முதல் புகைப்படத்திற்கு நான் காட்டிய ஆர்வம் போல், உன் நூற்றுக்கணக்கான புகைப்படத்திற்கும் இருக்கும், என் வெறுக்கா அன்பே....
    ©kowsuvinash

  • kowsuvinash 30w

    உன் தோளில் சாய்ந்து கதைத்து நகையாடினேன் கனவில்... கனவு மறையாமல் இருக்க கதிரவனை மறைத்தேன்..துயிலை நீட்டித்தேன்...கனவில் நொடி பொழுதில் மலர்ந்த இது நினைவில் நடக்குமா??
    ©kowsuvinash

  • kowsuvinash 30w

    அனைத்தும் என்னை சூழ்ந்திருக்கையில்...ஏதும் என்னை நெருங்காமல் உன் நினைவு என்னை சிறைப்பிடிக்கிறது..
    ©kowsuvinash

  • kowsuvinash 32w

    மறைய நினைக்கும் உன்னிடம் மறைக்கிறேன்...நீ மறைய வேண்டாம் என்பதை...மறைந்தாலும் மறையா மர்மமாய் என்னுள் தோன்றி உன் ஒளியால் எனக்கு தூது விட்டு என்னை காண வருகை தருகிறாய்.. நீ இருக்கும் தருவாயில் ரசிக்காமல்,நீர் மறையும் வேளையில் உன்னை ரசிக்க நினைக்கும் பேதை நான்...☀️
    ©kowsuvinash

  • kowsuvinash 32w

    உன்னை விட்டு செல்ல ஆசை இல்லை.. உன்னை விடாமல் இருக்க விலகுகிறேன்...என் அன்பு உனக்கு பாரமாய் மாறியதால்....
    ©kowsuvinash

  • kowsuvinash 33w

    அனைத்திலும் நீ...
    என் அமைதியும் நீ,அதை மீட்ட ஆரவாரமும் நீ.
    என் அழுகையும் நீ, என்னை சமாதனம் செய்த புன்னகையும் நீ.
    என் வலியும் நீ, அதற்கு கூறும் ஆறுதலும் நீ.
    என் தனிமையும் நீ, அதிலிருந்து நீங்கிய அருகாமையும் நீ.
    என் குளிரும் நீ, அதற்கு இதமான அனலும் நீ.
    இப்படி யாவும் நீயாகி நீராதாரம் இல்லாமல் இருக்க என் தாகம் போக்கும் தீர்த்தமாயும் நீ மாறி என்னை காதல் நீரில் மூழ்கடிப்பதேனடா??
    ©kowsuvinash