#yqtamil

9 posts
 • uyirttezhu 5w

  ... சமுதாய சாக்கடை...
  பசுமையான இயற்கை வளங்களை
  அழித்து விட்டு
  பசுமையை காப்போம் என்று
  கூச்சலிடும் சமூகமே
  உயிருக்கு ஆதாரமான உணவின் அருமையை
  உணராமல் சிலர் வீண் செய்ய
  உணவுக்காக ஏங்கி பசியால் மடியும்
  பலரின் அவலநிலை எப்போது மாறுமோ?
  மழலை மனம் மாறா பச்சிளம் குழந்தையை
  மனிதமே இல்லாமல் காமப்பசிக்கு
  இரையாக்குவது நியாயமா?
  மதித்து வணங்கும் பெண்மையை
  மிதித்து அடக்கநினைப்பது நன்மையா?
  ஒருவன் நிலை உயர்ந்தாலும்
  பொறாமைத் தீயில் வீசும்
  அவன் நிலை சிறிது
  தாழ்ந்தாலும் இவ்வுலகமே ஏசும்.
  முன் விட்டு பின் தாக்கும் எதிரியுமிருக்க
  உடனிருந்தே உன்னைத் தாக்கும்
  துரோகிகளும் உண்டே?
  சேற்றில் கால் வைத்து
  சோற்றை நமக்களிக்கும் உழவர்களையும்
  சோற்றுக்கு பதிலாக சேற்றை
  உண்ண வைக்கும் சமூகமிதுவே.
  தேங்கி நிற்கும் கழிவு நீர்
  துர்நாற்றம் வீசும் சாக்கடையாய் மாறும்
  தீய குணங்களை உடைய மனிதர்கள்
  வாழும் சமூகம் சமுதாய சாக்கடையாய்
  மாறி மரணத்தை நோக்கியே அழைத்துச்செல்லும்..
  - உயிர்த்தெழு நதியா

  #yqkanmani #tamil #uyirttezhu_quotes #yqtamil #uyirttezhu_poems #society #reality

  Read More

  சமுதாய சாக்கடை
  ©uyirttezhu

 • uyirttezhu 27w

  பச்சிளம் பூவே!!.
  ����������
  உன் கொஞ்சும் மொழிகளைக் கேட்டு
  என் நெஞ்சமும் அடைக்கலம் புக,
  கபடமில்லா மழலை புன்னகையால்
  நானும் சிறைபட்டு கிடைக்க,
  அடித்துச் செல்லும் தாயின் கால்களை
  அன்போடு பின்னாலிருந்து நீ அணைக்க,
  கோபம் கொண்ட தாயின் மனமும்
  கோடையில் பொழியும் மழையாய் குளிரூட்டும்.
  தத்தி தத்தி வரும் நடை அழகில்
  பொத்தி பொத்தி வைத்த என் மனமும்
  ஆனந்தத்தில் அருவியாய் பொங்கி வழியும்.
  அடித்த கைகளையும் அணைக்கச்
  செய்யும் அற்புதம் மந்திரத்தை
  எங்கு நீ கற்றாய்?
  இவ்வுலகைப் பற்றி அறியா வயதிலும்
  அன்பை மட்டுமே உலகமாகக் கொண்டாய்.
  மாபெரும் மாளிகையில் வாழும் வாழ்வும்
  மழலைகள் நிறைந்த குடிசைக்கு இணையாகுமா?
  துரோகம் மறைந்திருக்கும் இவ்வுலகத்தில்
  தூய்மை நிறைந்த ஓரிடம்.
  குறும்புத் தனமான குணத்தினைக் கண்டு
  குதூகலமாக மாறுதே பலருடைய மனம்.
  பால் வாசம் வீசும்
  பச்சிளம் பூ நீயே.
  மழலை மலரின் உறக்கத்தின் அழகில்
  மயங்கி நின்ற தேனீயும் நானே.
  நின் நா அசைய
  நான்கு சொற்களை கேட்கவே
  உன் சுற்றமெல்லாம் வண்டாய்
  உன்னை சுற்றிப் பறக்குமே.
  விலை உயர்ந்த பொருட்களும்
  உனக்கு விளையாட்டு பொருட்களே!
  தாயெனும் கோவிலின் கருவறையில்
  தரிசனம் தந்த கடவுளே!
  குழந்தைகள் இருக்கும் இடமே பசுமை வனம்
  உனக்காக பலர் நித்தமும் கிடைக்கின்றனர் தவம்.
  கண்டவுடன் காதல் கொள்ள
  வைக்கும் நின் புன்னகை
  மறுமுறையேனும் கிடைத்திடாதா அந்த
  மாசற்ற மழலை வாழ்க்கை.
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #yqtamil #uyirttezhu_poems #children

  Read More

  Love

 • uyirttezhu 56w

  ... நீங்கா நினைவுகள்...
  ����������
  �� குழந்தைப் பருவ குறும்புகளை அம்மா உரைக்க
  குதுகலமான நெஞ்சம் பல நினைவுகளை நினைக்க
  �� கொட்டும் மழையில் நனைந்து அம்மாவிடம்
  கொட்டு வாங்கிய நாட்களையும்
  கண்ணீரோடு புத்தகப் பையைச் சுமந்து
  பள்ளி சென்ற நாட்களையும்
  �� பருவம் பல கடந்து
  பள்ளிப் படிப்பை முடித்து
  பல உறவுகளை தொலைத்து
  நண்பர்களுடன் பழகிய நாட்களையும்
  �� உருவம் மாற பல துருவங்கள்
  நோக்கி வாழ்க்கை அழைத்துச் செல்ல
  �� பக்குவமாய் படித்து, பணிக்குச் சென்று,
  பணமீட்டி, குடும்பத்துடன் பலகாலம் வாழ்ந்து
  �� நிலையில்லா உறவுகள் நிறைந்த இவ்வுலகில்
  நித்திரையிலும் நினைவுகள் பல நிலைத்திருக்க
  �� இயந்திர பொம்மைகளை வைத்து
  விளையாடிய நாட்கள் தொடங்கி
  �� இயந்திரமாய் உழைத்து, இறக்கும்
  தருவாய் வரையிலான எண்ணற்ற
  நெஞ்சில் நீங்கா நினைவுகளையும்
  காட்சிப்படுத்தி காட்டுகிறது மனம்..
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #yqtamil #uyirttezhu_poems #memories #நினைவுகள்

  Read More

  Memories

 • uyirttezhu 58w

  ... யார் கவிஞன்?...
  ����������
  ✍️ கற்பனையில் பொய் கலந்து கவி வடித்தாலும்
  உண்மையை உரைக்க ஒரு நொடியும் தயங்கியதில்லை.
  ✍️ இனிமையான பல காதல் காவியம் படைத்தாலும்
  இச்சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைக்க மறந்ததும் இல்லை.
  ✍️ கருங்கற்களை கலை கற்களாக
  மாற்றும் சிற்பி போல
  சிந்தனை உளியால் வார்த்தைகளுக்கு
  சிறந்த வடிவம் கொடுப்பவன்.
  ✍️ இரண்டு பக்க செய்திகளையும் இரண்டே
  அடியில் விளக்கும் வல்லமை பெற்றவன்.
  ✍️ கோடி பணம் கொடுக்காத மகிழ்ச்சியினை
  காகிதத்தில் கொட்டும் மையினால் பெற்றிடுவான்.
  ✍️ வெற்று காகிதமும் இவனுடைய
  வைர வரிகளால் பொக்கிஷமாகிடுமே.
  ✍️ தனிமை பலருக்கு கொடுமையான வலிகளை தரும்
  ஆனால் கவிஞனுக்கு மட்டுமே வரிகளை தரும்.
  ✍️ எழுதுகோல் பிடித்தவனை பற்றி எழுத,
  என் எழுதுகோலாலும் முடியவில்லையே!..
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #yqtamil #uyirttezhu_poems #poet

  Read More

  Poet

 • uyirttezhu 58w

  ...கனவுகளும் கண்ணீரும்...
  கனவுகளோடு மட்டும்
  வாழ்பவர்கள் பலர்,
  கனவுகளை நினைவாக்க
  போராடுபவர்கள் சிலர்.
  நித்திரையில் வரும் கனவோ
  சிறிது நேரம்,
  நிஜ வாழ்க்கைக்கான கனவு
  பாதையோ நெடுந்தூரம்.
  வாழ்க்கையில் நிறைவேறாத
  கனவுகளோ ஏராளம்,
  அதனால் கண்களில் வடியும்
  கண்ணீரோ இங்கு தாராளம்...

  #tamil #uyirttezhu_quotes #yqtamil #uyirttezhu_poems #கனவு #dreams
  #mirakee #mirakee_tamil

  Read More

  Cry

 • uyirttezhu 58w

  ... தென்றல்...
  ����������
  �� ஐம்பூதங்களில் ஒன்றாக திகழும் காற்று
  உயிரினங்கள் வாழ முக்கியமானவற்றுள் ஒன்று
  �� தென்றலாய் தாலாட்டுவதும் காற்றே
  புயலாய் புடைபெயர்ப்பதும் இக்காற்றே
  �� கிழக்கு திசை கொண்டல் காற்றும்
  மேற்கு திசை கோடை காற்றும்
  வடக்கு திசை வாடை காற்றென
  வெவ்வேறு திசை காற்று வீசினாலும்
  �� நீண்ட மலைகளையும், அடர்ந்த காடுகளையும்
  கடந்து நறுமணங்களுடன் மெதுவாக வீசும்
  தெற்கு திசை தென்றல் காற்றே
  மென்மையாகவும், மனதிற்கு இதமாகவும் இருப்பதால்
  �� கவிஞர்களின் கற்பனை வலைகளில் சிக்கி
  கவிதைகளுக்கு இரையானாயோ தென்றல் காற்றே?
  - உயிர்த்தெழு நதியா
  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #yqtamil #uyirttezhu_poems #breeze

  Read More

  தென்றல்

 • uyirttezhu 58w

  ... பசுமை புரட்சி...
  ����������
  �� மகசூலை அதிகரிக்கும் நோக்கில்,
  மண்வளத்தை இழந்துவிட்டோம் காலப்போக்கில்.
  �� பசிக்கு எதிராக தொடங்கிய புரட்சி,
  பல பாதிப்புக்குள்ளானதால் ஏற்பட்டது வீழ்ச்சி.
  �� பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகத்தால் ஏற்பட்ட விளைவு,
  பல நன்மைச் செய்யும் நுண்ணுயிர்களின் இனத்திற்கும் அழிவு.
  �� செயற்கை உரங்களின் பயன்பாட்டை குறைத்து,
  இயற்கை உரங்களின் உபயோகத்தை அதிகப்படுத்து.
  �� குடிக்கும் நீரும் விஷமானது,
  காய்கனிகளின் சுவையும் மறைந்துபோனது.
  �� விதைகளின் வீரியம் குன்றிப் போனது,
  விதவிதமான நோய்கள் வந்து சேர்ந்தது.
  �� இதேபோல், மண்ணின் வளம் குறைந்து கொண்டேபோனால்,
  இம்மனிதனின் நலமும் பாதிப்புக்கு உள்ளாகும்...
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #yqtamil #uyirttezhu_poems #greenrevolution #savenature

  Read More

  .

 • uyirttezhu 65w

  நீ உடன் இருந்திருக்கலாம் என்ற
  நினைப்பு என் இதயத்தின்
  துடிப்பாகவே மாறி விட்டது...
  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #yqtamil #collab #kadhalnathi

  Read More

  Love

 • gomal_sivaraam 166w

  Kiss(v)

  A passionate barter.
  ©gomal_sivaraam