#uyirttezhu_poems

62 posts
 • uyirttezhu 6w

  ... சமுதாய சாக்கடை...
  பசுமையான இயற்கை வளங்களை
  அழித்து விட்டு
  பசுமையை காப்போம் என்று
  கூச்சலிடும் சமூகமே
  உயிருக்கு ஆதாரமான உணவின் அருமையை
  உணராமல் சிலர் வீண் செய்ய
  உணவுக்காக ஏங்கி பசியால் மடியும்
  பலரின் அவலநிலை எப்போது மாறுமோ?
  மழலை மனம் மாறா பச்சிளம் குழந்தையை
  மனிதமே இல்லாமல் காமப்பசிக்கு
  இரையாக்குவது நியாயமா?
  மதித்து வணங்கும் பெண்மையை
  மிதித்து அடக்கநினைப்பது நன்மையா?
  ஒருவன் நிலை உயர்ந்தாலும்
  பொறாமைத் தீயில் வீசும்
  அவன் நிலை சிறிது
  தாழ்ந்தாலும் இவ்வுலகமே ஏசும்.
  முன் விட்டு பின் தாக்கும் எதிரியுமிருக்க
  உடனிருந்தே உன்னைத் தாக்கும்
  துரோகிகளும் உண்டே?
  சேற்றில் கால் வைத்து
  சோற்றை நமக்களிக்கும் உழவர்களையும்
  சோற்றுக்கு பதிலாக சேற்றை
  உண்ண வைக்கும் சமூகமிதுவே.
  தேங்கி நிற்கும் கழிவு நீர்
  துர்நாற்றம் வீசும் சாக்கடையாய் மாறும்
  தீய குணங்களை உடைய மனிதர்கள்
  வாழும் சமூகம் சமுதாய சாக்கடையாய்
  மாறி மரணத்தை நோக்கியே அழைத்துச்செல்லும்..
  - உயிர்த்தெழு நதியா

  #yqkanmani #tamil #uyirttezhu_quotes #yqtamil #uyirttezhu_poems #society #reality

  Read More

  சமுதாய சாக்கடை
  ©uyirttezhu

 • uyirttezhu 20w

  ... நீர்...
  பஞ்சமில்லா வாழ்வைத் தரும்
  பஞ்சபூதங்களில் நீரும் ஒன்று,
  பரந்து விரிந்து கிடந்தாலும்
  பலகோடி மக்கள் பருகுவதற்கு
  தூய நீரில்லையே இன்று.
  உருவமற்ற திரவத்திற்கு நிறமும் இல்லை,
  கொட்டும் மழைநீரை சேகரிக்க ஆளுமில்லை.
  நீரில்லா கோளும் நிலவாக மாறும்,
  நீரிருந்தால் நிலவும் பூமியாகத் தோன்றும்.
  ஓடும் பாதைகளைத் தடுத்தால்
  புதிய பாதைகளை உருவாக்கும்,
  கல்லெறியும் மக்களையும் கண்டு
  கொள்ளாமல் செல்லும் நீரினைப்
  போன்றே நாமும் வாழவேண்டும்,
  போகும் இடமெல்லாம் நின்பெயரை
  ஊர் சொல்லல் வேண்டும்...
  - உயிர்த்தெழு நதியா

  #tamil #uyirttezhu_quotes #uyirttezhu_poems #water #mirakee_tamil #mirakee

  Read More

  Water

 • uyirttezhu 20w

  ... குடும்பம்...
  குடும்பமெனும் ஆலமரத்தினிலே
  விழுதுகளாய் உறவுகள்.
  பாதைகளற்ற பயணத்தினிலே
  வழிகாட்டியாய் முன்னோர்கள்.
  கவலையான முகத்தினை கண்டு
  கட்டியணைக்க அன்னையும் உண்டு.
  கடுமையான குணத்திற்கு பின்பு
  மறைந்திருக்கிறது தந்தையின் அன்பு.
  உடன்பிறப்புகள் உடன் இருந்தால்
  உலகப்போரே நிகழ்வது உண்டு.
  கூடி வாழ்ந்த காலத்தினிலே
  கோடி இன்பம் கண்டவர்களுமுண்டு.
  நாகரீகத்தை நாடிச் சென்றதனாலே
  நிம்மதி இழந்து தவிக்குது.
  இன்பங்களை அள்ளி அள்ளி
  கொடுப்பதனாலே குடும்பமென்றானது...
  - உயிர்த்தெழு நதியா

  #uyirttezhu_quotes #uyirttezhu_poems #family #mirakee_tamil #mirakee

  Read More

  Family

 • uyirttezhu 27w

  Life

 • uyirttezhu 27w

  பச்சிளம் பூவே!!.
  ����������
  உன் கொஞ்சும் மொழிகளைக் கேட்டு
  என் நெஞ்சமும் அடைக்கலம் புக,
  கபடமில்லா மழலை புன்னகையால்
  நானும் சிறைபட்டு கிடைக்க,
  அடித்துச் செல்லும் தாயின் கால்களை
  அன்போடு பின்னாலிருந்து நீ அணைக்க,
  கோபம் கொண்ட தாயின் மனமும்
  கோடையில் பொழியும் மழையாய் குளிரூட்டும்.
  தத்தி தத்தி வரும் நடை அழகில்
  பொத்தி பொத்தி வைத்த என் மனமும்
  ஆனந்தத்தில் அருவியாய் பொங்கி வழியும்.
  அடித்த கைகளையும் அணைக்கச்
  செய்யும் அற்புதம் மந்திரத்தை
  எங்கு நீ கற்றாய்?
  இவ்வுலகைப் பற்றி அறியா வயதிலும்
  அன்பை மட்டுமே உலகமாகக் கொண்டாய்.
  மாபெரும் மாளிகையில் வாழும் வாழ்வும்
  மழலைகள் நிறைந்த குடிசைக்கு இணையாகுமா?
  துரோகம் மறைந்திருக்கும் இவ்வுலகத்தில்
  தூய்மை நிறைந்த ஓரிடம்.
  குறும்புத் தனமான குணத்தினைக் கண்டு
  குதூகலமாக மாறுதே பலருடைய மனம்.
  பால் வாசம் வீசும்
  பச்சிளம் பூ நீயே.
  மழலை மலரின் உறக்கத்தின் அழகில்
  மயங்கி நின்ற தேனீயும் நானே.
  நின் நா அசைய
  நான்கு சொற்களை கேட்கவே
  உன் சுற்றமெல்லாம் வண்டாய்
  உன்னை சுற்றிப் பறக்குமே.
  விலை உயர்ந்த பொருட்களும்
  உனக்கு விளையாட்டு பொருட்களே!
  தாயெனும் கோவிலின் கருவறையில்
  தரிசனம் தந்த கடவுளே!
  குழந்தைகள் இருக்கும் இடமே பசுமை வனம்
  உனக்காக பலர் நித்தமும் கிடைக்கின்றனர் தவம்.
  கண்டவுடன் காதல் கொள்ள
  வைக்கும் நின் புன்னகை
  மறுமுறையேனும் கிடைத்திடாதா அந்த
  மாசற்ற மழலை வாழ்க்கை.
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #yqtamil #uyirttezhu_poems #children

  Read More

  Love

 • uyirttezhu 43w

  ... தொலைந்து போன திருவிழாக்கள்...
  ����������
  மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும் பல திருவிழாக்கள்.
  இனங்களைக் கடந்து ஒற்றுமையுடன் கொண்டாடப்படும் சில விழாக்கள்.
  அறுவடையை படைத்து ஆதவனை
  வணங்கும் தைத் திருநாள்.
  ஆவாரம் பூச்செண்டை கூரையில் செருகி,
  பழையன கழித்து புதியன
  புகுத்தும் போகித் திருநாள்.
  பசி, பிணி, பகையால் துன்பம்
  அடையாது இருத்தல் வேண்டி,
  மருத நிலத் தலைவனை
  சாந்தப்படுத்தும் இந்திர திருவிழா.
  உறவுகள் பெருக கூட்டாகச் சேர்ந்து
  சோறாக்கி உண்ணும் கூட்டாஞ்சோறு திருவிழா.
  வாழ்க்கையில் தன்னம்பிக்கை
  எனும் அகல் விளக்கேற்றி,
  துன்பம் எனும் இருளை நீக்கி,
  இன்பம் எனும் ஒளியை
  பெரும் கார்த்திகை திருவிழா.
  இளவேனிற் காலத்தில் காதலர்கள் களித்து
  விளையாடும் இளவேனில் விழா.
  இம்மண்ணின் வீரர்களின் திறமைகளை
  அரங்கேற்றும் பூந்தொடை விழா.
  திருமாலின் பெருமையை போற்றும்
  திருவோணம் விழா.
  ஆடும் கலைஞர்களின் அற்புத
  கோடியர் விழா.
  பாரம்பரிய திருவிழாக்களில் நம்
  மனங்களை தொலைத்தோம் அன்று,
  பல திருவிழாக்களையே மறந்து
  தொலைத்துவிட்டோம் இன்று.
  எண்ணற்ற திருவிழாக்களை எழுத முடியவில்லை,
  இனிவரும் காலங்களில் மாறுமோ இந்த நிலை?
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #uyirttezhu_poems #festival #திருவிழா #anicient

  Read More

  Festivals

 • uyirttezhu 45w

  ... ஏவுகணை நாயகன்...
  ����������

  கடைக்கோடி இராமேஸ்வரத்தில் கலாமாக பிறந்து
  இளைஞர்களின் இதயத்தில் கனவு விதையை
  விதைத்த எங்கள் கனவு நாயகன்.
  குழந்தைப் பருவத்தில் பள்ளி நேரம்போக
  குடும்பத்திற்காக செய்தித்தாள் விநியோகம் செய்தவர்.
  பின் நாளில் செய்தித்தாளில் மட்டுமின்றி
  குழந்தைகளின் இதயத்திலும் தனியிடம் பிடித்தவர்.
  விண்வெளித் துறையில் தன் படிப்பினைத் தொடங்கி
  இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தையாக உயர்ந்தவர்.
  இந்திய ராணுவத்திற்காக வானூர்தியை வடிவமைத்தவர்,
  ஏவுகணைச் சோதனையிலும் சாதனை படைத்தவர்.
  பதினொன்றாம் குடியரசுத் தலைவராக பதவியேற்று
  மக்களின் ஜனாதிபதியாக இன்னும் வாழ்பவர்.
  பாரதத்தின் உயரிய விருதுகளில் தொடங்கி
  பாரினிலுள்ள பல விருதுகளைப்
  பெற்ற எழுச்சி நாயகன்.
  எளிமையாக வாழ்ந்த ஏவுகணை நாயகன்.
  விண்வெளியோடு சேர்ந்து வீணையின்மீதும் விருப்பம்
  இளைஞர்களுக்காக எழுதினார் பல புத்தகம்.
  மருத்துவத் துறையிலும் பல கண்டுபிடிப்பு
  இந்தியாவை வல்லரசு நாடாக
  மாற்றுவதே கலாமின் இதயத்துடிப்பு.
  சாதாரண மனிதனாக இப்பூமியில் அவதரித்து
  சாதனை மனிதனாக உயர்ந்த அக்கினிச்சிறகே,
  விஞ்ஞான உலகில் அஸ்தமனமான கதிரவன்
  இன்னும் உதயமானதே இல்லை.
  நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த பிரம்மச்சாரி
  இவர்போல் இனியொருவர் பிறப்பதே கேள்விக்குறி?..
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #uyirttezhu_poems #agnisirage #abdulkalam

  Read More

  Apj

 • uyirttezhu 47w

  Life

 • uyirttezhu 47w

  ... கர்மவீரர்...
  ����������
  ... கர்மவீரர்...
  விருதுநகர் மாவட்டத்தில் காமராஜராக பிறந்து
  வித்யாலயங்கள் பல உருவாக வித்திட்டவர்
  விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று
  பல முறை சிறைக்கு சென்றவர்
  விவசாயம் தழைத்தோங்க பல
  அணைகளைக் கட்டியவர்
  தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழ்நாட்டை
  சிறந்த மாநிலமாக
  மாற்றி நல்லாட்சி செய்த மாபெரும் தலைவர்
  மூன்று முறை தமிழக முதல்வராகவும்
  நான்கு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும்
  ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்
  ஐந்துமுறை இந்திய காங்கிரஸ் தலைவராகவும்
  பதவிகள் வகித்த கிங்மேக்கர் காமராஜர்
  படிக்காத மேதை என்றாலும்
  பகைவர்களும் மதிக்கும் பண்பாளரவர்
  மதிய உணவு திட்டம் கொண்டு வந்து
  மனிதநேயத்தின் மறு உருவமாக திகழ்ந்த மாமேதை
  பட்டப்படிப்பு கொடுக்காத பல அனுபவங்களை
  பகுத்தறிவால் பெற்ற கல்வி நாயகன்
  சாமானிய மக்களும் தன்னை தடையின்றி
  சந்திக்க வழிவகை செய்த கர்மவீரர்
  அழகுத் தமிழில் பேசும் பச்சைத்தமிழன்
  "மக்களுக்காகத் தான் சட்டமே தவிர
  சட்டத்திற்காக மக்கள் இல்லை " என்று
  உரைத்த கருப்பு காந்தி
  தன்னை எதிர்த்த எதிரிகளையும் அரவணைத்து
  பலரையும் வியப்பில் ஆழ்த்தி
  திருமணம் செய்யாமலே எளிமையாய் இறுதிவரையும்
  வாழ்ந்த மக்கள் தலைவர்..
  - உயிர்த்தெழு நதியா

  #tamil #uyirttezhu_quotes #mirakee_tamil #mirakee #uyirttezhu_poems #kamarajar

  Read More

  Life

 • uyirttezhu 47w

  ... பரிசு...
  ����������
  விழாக்களில் விருந்தினர்கள் நமக்கு
  அளிக்கும் அன்பான அன்பளிப்பு,
  விளையாட்டுகளில் வென்று வீரர்கள்
  பெறும் வெற்றி பரிசு,
  வாழ்ந்து முடித்தவருக்கு அனுபவம்
  ஓர் அரிய பரிசு,
  விலை கொடுத்து வாங்கிய
  விலையுயர்ந்த பொருட்களை விட 
  விருப்பமானவர்கள் கொடுக்கும் சிறு
  பொருளும் சிறந்த பரிசே,
  கலைகளுக்காய் தன்னை அர்ப்பணித்து
  கரகோசத்தால் அரங்கமே அதிர
  பாராட்டோடு பெறும் பரிசு,
  காயம் கொண்ட மனிதனுக்கு
  ஆறுதல் மொழி பரிசு,
  உளியாய் தம்மை தாழ்த்தி
  சிலையாய் நம்மை உயர்த்திய
  ஆசானும் ஓர் பரிசு,
  அழுகின்ற சேய்க்கு அரவணைத்து 
  அன்னை கொடுக்கும் முத்தம்
  தான் முதல் பரிசு,
  அன்பு கொண்ட இதயத்திற்கு 
  அன்பானவர்கள் தமக்காய் ஒதுக்கும்
  நேரம்தான் உயர்ந்த பரிசு,
  மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக
  பாடுபட்டவர்களுக்கு நோபல் பரிசு,
  மண்ணில் வாழ்ந்து முடித்தவர்களுக்கு
  மரணம் தான் பரிசு,
  இறக்கும் தருவாயிலும் நினைவுகள்
  தான் நிலையான பரிசு,
  இறக்கும் வரையிலும் எவருக்கும்
  கிடைக்காத நிம்மதியெனும் பரிசு,
  வென்றவருக்கு சிறந்த பரிசு,
  வெற்றி பெற ஊக்கப்பரிசு,
  பிறரிடம் கேட்டுபெறுவது பரிசல்ல 
  பலர் பார்க்கபெறுவதுதான் பரிசு.
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #uyirttezhu_poems #gift

  Read More

  Gift

 • uyirttezhu 47w

  ... வளர்பிறை...
  ����������
  இரவில் இருளினை நீக்கி ஒளிதரும் சந்திரனுக்கு
  புவியிலிருந்து ஓர் நாள் மட்டும் விடுமுறையாம்,
  இருள் சூழ்ந்த அமாவாசை நாளிலிருந்து
  இவளும் பிறையாக வளர்ந்து தெய்வதனால்
  இவ்வையகத்தில் வளர்பிறை என்ற பெயரோ.
  அறிவியல் ரீதியான காரணங்கள் பலயிருக்க,
  ஆன்மீகத்தில் போற்றப்படும் ஓர் அரசன்தான்.
  புலவர்களுக்கு பெண்ணாக தெரியும் நீ,
  புராணங்களில் நட்சத்திரப்பெண்களுக்கு துணைவன் ஆனாய்.
  சிவபெருமானின் தலையில் பிறை
  நிலவாக நீ இருக்க,
  சிலர் பிறை நிலவை
  கண்டு நோன்பினை முடிக்க.
  வளர்பிறையாய் வளர்ந்து வானில்
  வட்டமாய் ஒளிரும் நிலவே,
  வளர்ந்தாலும் தேய்ந்தாலும் இன்றுவரை
  நீதான் வானத்தின் அழகே.
  இருள் போன்ற துன்பத்தினை துடைத்தெறிந்து,
  வளர்பிறையாய் வாழ்க்கையில் நீ உயர்ந்தால்
  முழுநிலவான இன்பத்தினை முயற்சியினால் பெற்றிடலாம்.
  வளர்ந்தாலும் தேய்ந்தாலும் நிலவின்
  ஒளி மங்காததைப் போல,
  வாழ்க்கையில் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் உன்
  மனதில் இன்பத்தினை மட்டுமே விதைத்திடுவாய்....
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #uyirttezhu_poems #crescent #நிலவு

  Read More

  Moon

 • uyirttezhu 47w

  Air

 • uyirttezhu 47w

  ... வெட்டப்பட்ட மரம்...
  ����������
  நான் வெட்டப்பட்ட மரம் பேசுகிறேன்;
  நவீன வளர்ச்சியால் நாகரீகத்தை மறந்த மனிதனே,
  நட்டு வளர்ந்த என்னையேன் வெட்டி வீழ்த்தினீர்கள்.
  சிறு விதையாக விழுந்த நான்
  ஓர் விருட்சமாக உயர்ந்து வளர்ந்தேன்,
  மண்ணில் விழுந்தவுடன் உயர்ந்து
  வளர்ந்தவன் நான் அல்ல,
  உன் பல தலைமுறைகளையும் பார்த்து
  வளர்ந்தவன் நானே மானிடா!
  கனிகளைப் பறித்து ருசி பார்த்தாய்,
  கிளைகளை வெட்டி பல பொருட்களாக்கினாய்,
  நிழலுக்காக என்னிடம் அடைக்கலம் புகுந்தாய்,
  நின் நினைவுகளை எல்லாம் என்னிடம் பகிர்ந்தாய்,
  மழைப் பொழிந்து மண்வளம் பேணினேன்,
  மாசற்ற காற்றை நான் கொடுத்தேன்,
  மரணத்தை எனக்கேன் பரிசாகக் கொடுத்தாய்?
  எல்லாப் பயனும் நான் கொடுத்தேன்,
  உன் சுயநலத்திற்காக என்னையேன்
  வெட்டி பலி கொடுத்தாய்,
  நான் வளர்ந்தால் பல
  தலைமுறைகளை வாழ வைப்பேன்,
  நான் வீழ்ந்தாலும் மண்ணுக்கு
  உரமாகி மறு உயிர்கொடுப்பேன்...
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #uyirttezhu_poems #cuttingtrees #trees

  Read More

  Tree

 • uyirttezhu 47w

  ... பணம் பத்தும் செய்யும்...
  ����������
  ஒரு நாட்டின் பலம் பொருளாதாரம் என்றால்,
  அப்பொருளாதாரத்தின் அடித்தளம் பணமே ஆகும்.
  பணம் மனிதனின் பண்பை
  மாற்றும் வல்லமை வாய்ந்தது,
  பணம் இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை
  இருப்பதாகவும் காட்டும் தன்மை கொண்டது.
  பணம் படைத்த பிள்ளைகள் பள்ளிக்கு செல்கிறது,
  வறுமையின் பிடியில் சிக்கிய
  குழந்தைகள் பணிக்குச் செல்கிறது.
  உப்பில்லா பண்டம் குப்பையில் கிடப்பது போல,
  பொருள் இல்லையேல் அரசனும் ஆண்டியே.
  பத்து விதமான நல்ல குணங்களை அழித்து,
  பத்து விதமான படுபாதக
  குற்றங்களையும் செய்ய தூண்டும்.
  செல்வாக்கு உடையவனின் தவறுகளைச் செல்லாததாகும்,
  செய்யாகுற்றத்திற்கு வறியவனின் வாழ்வையே உருக்குலைக்கும்.
  உடல்பலம் உள்ளவன் எய்தும் ஈட்டி
  அவன் ஏய்தும் தூரமே செல்லும்,
  பணபலம் உள்ளவன் எய்தும்
  பணமெனும் ஆயுதம் இருந்த
  இடத்தில் இருந்து கொண்டே
  பாதாளம் வரை பாயும்.
  ஆதிக்கம் இருக்கும் இடத்தில் ஆளுமை இருக்கும்,
  பணம் இருக்கும் இடத்தில் ஜனத்தொகை இருக்கும்.
  வாழ்வதற்கு பணம் தேவை
  ஆனால் பணமே வாழ்வாகாது...
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #uyirttezhu_poems #money #moneypower

  Read More

  Money

 • uyirttezhu 47w

  Humanity

 • uyirttezhu 47w

  ... இலவசம்...
  ����������
  இலவசம் என்றாலே அனைவரின்
  முகத்திலும் இன்பம் பிறக்கும்,
  தரமற்ற சில பொருட்களின்
  தகுதியை உயர்த்திக் காட்டும்,
  வாங்கும் கைகளை அடிமைகளாக்கும்,
  கொடுக்கின்ற கைகளை ஆட்சிப்படுத்தும்,
  திண்டாட்டக் காலத்தில் வழங்கப்படும்
  விலையில்லா பொருட்கள் பலருடைய
  வாழ்க்கையில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தும்,
  உழைப்பு என்ற சொல்லையே உருக்குலைக்கும்,
  உயர்ந்த பொருட்களையும் உதாசீனப்படுத்தும்,
  ஆசைகளை அதிகப்படுத்தும்,
  மனிதர்களை மந்தமாக்கும்,
  இலவசக்கல்வி பலருடைய வாழ்க்கையில் ஒளியேற்றும்,
  இலவச மருத்துவம் பலருக்கு வாழ்வளிக்கும்,
  அடிப்படையான இலவசம் பலருக்கு அவசியம்,
  ஆடம்பரத்தை தூண்டும் இலவசம்
  சில சமயங்களில் அனாவசியம்,
  இலவசம் என்ற சொல்லுக்கு
  இவ்வுலகமே கைவசம்...
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee_tamil #mirakee #tamil #uyirttezhu_quotes #uyirttezhu_poems #free #slaves

  Read More

  Free

 • uyirttezhu 47w

  ... தலைக்கவசம்...
  ����������

  விலை மதிப்பற்ற உயிரை
  விபத்தில் இழப்பது நியாயம்தானோ?
  அலட்சியமான சில செயல்களால்
  அவசியமான உயிரை இழந்திடலாமோ?
  சட்டம்தான் சரி செய்ய வேண்டும் என்றில்லாமல்,
  சாமானியர்களும் சாலை விதிகளை மதித்து நடந்தால்,
  சாலை விபத்தினால் நிகழும் சாவை தடுத்திடலாமே!
  வாசகங்களை மட்டும் வாசித்து செல்லாமல்,
  வாகனங்களில் பயணிக்கும் பொழுது தலைக்கவசத்தை
  அணிந்து செல்வது பற்றியும் யோசியுங்களே!
  சிரத்திற்கு கீழே அடிபட்டால்
  சிறு காயம் தானடா,
  சிரத்திலே அடிபட்டால் உனக்கு
  வாழ்வே இல்லை யோசிடா.
  தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் நீ பயணித்தால் ,
  தலைமுறையே அமைதியாய் வாழும் உன் வீட்டினிலே.
  காவலருக்கு அஞ்சி அணிந்திடாமல்,
  காலனுக்கு அஞ்சி அணிந்திடுவாய்.
  தலைக்கு வந்தது தலைப்பாகையோடு
  போனது இது பழமொழி,
  தலைக்கு வந்தது தலைக்கவசத்தோடு
  போனது இது புதுமொழி...
  - உயிர்த்தெழு நதியா

  #mirakee #mirakee_tamil #tamil #uyirttezhu_quotes #uyirttezhu_poems #life #dobetter #Helmet #safety

  Read More

  Life

 • uyirttezhu 54w

  Life

 • uyirttezhu 56w

  Bird

 • uyirttezhu 56w

  Love